Saturday,8th of June 2013
சென்னை::இந்த செய்தியை கேட்டதும் எத்தனை பேர் காதுகளில் புகை வந்ததோ, இன்னும் வரப் போகிறதோ தெரியாது.
சிவ கார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிக்கப் போகிறார். படத்தைத் தயாரிக்கப் போகிறவர் ஏ.ஆர். முருகதாஸ். இது ஒரு முழு நீள காமெடி படமாம்.
இதைப் பற்றி ஹன்சிகா கூறுகையில், “ இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதை பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படத்தின் கதையும், திரைக்கதையும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
சிவ கார்த்திகேயனின் வளர்ச்சியும், திறமையும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. அவருடைய ஜோடியாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தரும் என நினைக்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.
Comments
Post a Comment