24th of June 2013
சென்னை::குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் படம் ‘பட்டத்து யானை’. இதில் விஷால் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். பூபதி பாண்டியன் இயக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

படத்தின ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய விஷால், மலைக்கோட்டை படத்தில் நடித்த போதே பட்டத்து யானை குறித்து நானும், பூபதி பாண்டியனும் யோசித்து வைத்திருந்தோம். ஆனால் அதற்கான நேரம் இப்போதுதான் அமைந்திருக்கிறது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இணைகிறோம். பட்டத்து யானை படம் முழு காமெடிப்படமாக மட்டுமின்றி கமர்ஷியல் படமாகவும் இருக்கும். ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இது முதல் படம். ஆனால் அவர் ஏற்கனவே பல படங்களில் நடித்ததை போன்றதொரு அனுபவம் இதில் தெரியுது.
ஒரு படத்தின் நாயகன், நாயகிக்கு மட்டும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கணும்னு கிடையாது. அந்தப் படத்தோட நாயகன், இயக்குனருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருந்தாலே படம் ஹிட்டாகும். இந்த படத்தில் எனக்கும், இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு இடையே கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க்கவுட்டாயிருக்கு” என்றார்.
விழாவில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், ஆர்யா, டைரக்டர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், பட தயாரிப்பாளர் கேயார், மியூசிக் டைரக்டர் தமன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மயில்சாமி உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment