அமலா பால் சம்பளம் ஒரு கோடி?!!!

Sunday,9th of June 2013
சென்னை::ஆந்திர திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.ஒரு சில தெலுங்குப் படங்களில் இரண்டு நாயகிககளில் ஒருவராக மட்டுமே நடித்து வருபவர் அமலா பால். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ‘இத்தராமயிலதோ’ படத்திற்கு இரு விதமான விமர்சனங்கள் எழுந்தாலும் படம் நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
 
கேரளாவிலும் இந்த படம் ‘டப்’ செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறதாம்.இதனால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் அமலா பால். ஆனால், அதை விட பெரிய சந்தோஷம் ஒன்று வந்தும் அதைக் கொண்டாட முடியாமல் இருக்கிறாராம்.
 
அதுதான் சம்பள விவகாரம். ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் அமலா பாலுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் மெல்ல ஆந்திரத் திரையுலகில் கசிந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமலா பாலுக்கு ஒரு கோடி கொடுக்க முன் வந்த தயாரிப்பாளர் யார் என்பதுதான் அங்கு இப்போதைய ஒரே பேச்சு.

Comments