சினிமா உதவி இயக்குனர்களுக்கு ஊதிய உயர்வு : விக்ரமன்!!!

Monday,10th of June 2013
சென்னை::திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விக்ரமன், உதவி இயக்குனர்களுக்கு ஊதிய உயர்வு பெற்றுத் தருவதுதான் முதல் வேலை என்றார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நேற்று நடந்தது. இயக்குனர்கள் விக்ரமன், விசு தலைமையிலான அணிகள் போட்டியிட்டன. நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 1289 வாக்குகள் பதிவானது. விக்ரமன் 717 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு தேர்வானார். விசு 562 வாக்குள் பெற்று தோல்வி அடைந்தார். மற்ற பதவிகளுக்காக வாக்கு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நிர்வாகிகள் விவரம் முழுமையாக தெரிந்தபிறகு ஓரிரு நாளில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.

தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விக்ரமன் கூறும்போது, ‘உதவி இயக்குனர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி பெற்றுத்தருவதுதான் முதல் வேலை. சங்கத்துக்கு சொந்தமாக ‘5 டி கேமரா வாங்கி அதை உதவி இயக்குனர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வழங்கப்படும். அதன் மூலம் குறும்படங்களை இயக்கி கொள்ள முடியும். அதை ரிலீஸ் செய்வதற்கும், தயாரிப்பாளருக்கு திரையிட்டு காட்டவும் சங்கமே உதவி செய்யும் என்றார்.

Comments