கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கவில்லையாம்!!!

13th of June 2013
சென்னை::தற்போது தமிழில் விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இந்த படங்களில் நடித்துக்கொண்டே சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்து வரும் காஜலிடம், லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிப்பதற்கும் கால்சீட் பேசி வந்தனர்.

கமல் படம் சம்பந்தமாக தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார் காஜல். என்னை கவர்ந்த சில நடிகர்களில் கமலும் ஒருவர். அவருடன் நடிப்பது எனக்கு பெரிய சந்தோசம் என்று தனது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு வந்தார். ஆனால், என்ன குழப்பம் நடந்ததோ, இப்போது காஜல் அந்த படத்தில் இல்லையாம். வேறு கதாநாயகி பார்த்து வருகிறார்களாம்.

ஆனால், பேச்சுவார்த்தையில் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை வெளியில் சொல்ல மறுக்கும் காஜல், தன்னிடம் அதுபற்றி விசாரிப்பவர்களிடம், அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்தேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு படம் இருப்பதால் என்னால் கால்சீட் தர முடியவில்லை என்று சொல்லி சமாளித்து வருகிறார்.

Comments