அதிக விலை போன ‘தலைவா!!!

Saturday,1st of June 2013
சென்னை::விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் விஜய், அமலா பால், சந்தானம், சத்யராஜ் நடிக்கும் படத்தை ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இந்த படத்தை இவர்களிடமிருந்து வேந்தர் மூவீஸ் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. இதுவரை வெளிவந்த விஜய் படங்களை விட இப்படத்திற்காக மிகப் பெரிய விலை கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
வேந்தர் மூவீஸ் தொடர்ச்சியாக பல படங்களை வாங்கி வெளியிட்டும், சொந்தமாக தயாரித்தும் வருகிறது. சமீபத்தில் இவர்கள் வாங்கி வெளியிட்ட ‘எதிர் நீச்சல்’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
 
‘தலைவா’ படத்தின் இசை வெளியீடு விஜய் பிறந்தநாளான ஜுன் 22ம் தேதியன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஜுலை மாதத்தில் படம் வெளியாக இருக்கிறது.

Comments