Friday,7th of June 2013
சென்னை::சிங்கம்’ தெலுங்கு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது அனுஷ்கா பேசியதாவது,
சிங்கம் – 1’ எந்த அளவுக்கு பரபரப்பா, விறுவிறுப்பா இருந்ததோ, அதிலிருந்து சிறிதும் குறையாமல் இந்த படம் இருக்கும்.
வழக்கமா ஒரு படத்தோட இரண்டாம் பாகம் வரும் போது, கேரக்டர்ஸ்லாம் மாறிடும். ஆனால், இந்த படத்துல அப்படி எந்த கேரக்டர்ஸும் மாறலை. 3 வருஷம் கழிச்சும் எல்லாரும் அதே கேரக்டர்ஸ்ல நடிக்கிறோம். சினிமா வரலாற்றில இதுதான் முதல் முறையா இருக்கும்னு நினைக்கிறேன்.
சூர்யா ஒரு அற்புதமான நடிகர். அவர் ஒரு ஆல் ரவுண்டர். அப்பாவா, கணவனா, நண்பனா, கூட நடிக்கிற நடிகரா அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம்.
இயக்குனர் ஹரி ஒரு தெளிவான இயக்குனர். ஒரு படத்துல எப்ப பாட்டு வைக்கணும், எந்த சீனை எப்படி எடுக்கணும்னும்கறத அழகா செய்வாரு. அது மட்டுமில்ல ரொம்ப அழகா நடிச்சும் காட்டுவாரு.
மொத்தத்துல ‘சிங்கம் 2’ ரொம்ப சூப்பரா வந்திருக்கு. நீங்க எல்லாரும் கண்டிப்பா ரசிப்பீங்க,” என்றார்.
Comments
Post a Comment