24th of June 2013
சென்னை::விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் கடைசி ஷெட்யூல் சென்னையில் நடக்கிறது.
என்ன காரணமோ... இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சிலர் அவர்களாகவே வலை என்ற பெயரை தேர்வு செய்து படத்துக்கு சூட்டியிருக்கிறார்கள்.
ஆனால் படத்தின் பெயர் வலை கிடையாது என விஷ்ணுவர்தன் தெரியப்படுத்தியிருக்கிறார். அஜீத் ரசிகர்கள் தல 53 என்றும், பத்திரிகைகள் அஜீத் 53 என்றும் அஜீத்தின் பட எண்ணிக்கையை வைத்தே படத்தை குறிப்பிட வேண்டிய நிலை.
வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தயாரான இப்படத்தின் கடைசி ஷெட்யூல் சென்னையில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பு முடிந்தால் மொத்த படமும் ஓவர். போஸ்ட் புரொடக்சன் வேலைகள் மட்டுமே பாக்கியிருக்கும்.
அஜீத், ஆர்யா, நயன்தாரா, தாப்ஸி, ராணா நடித்திருக்கும் இந்தப் படத்தில் கம்ப்யூட்டர் ஹேக்கராக நடித்திருக்கிறாராம் அஜீத். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.
ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் படம் வெளிவரும்.
Comments
Post a Comment