நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ராஜா, ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார்கள்: கதாநாயகியாக நயன்தாரா!!!

20th of June 2013
சென்னை::நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ராஜா, ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார்கள். ‘எங்கேயும் காதல்’, ‘ஆதிபகவன்’, ‘நிமிர்ந்து நில்’ என ஜெயம் ரவி பிஸியாகிவிட்டார். ராஜாவும் விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ எடுத்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவியை இயக்குவதற்காக சூப்பர் கதையொன்றைத் தயார் செய்திருக்கிறார் ராஜா. ஜெயம் ரவியிடமும் கதையை சொல்லி ஓ.கே. வாங்கி விட்டாராம். கல்பாத்தி அகோரம் தயாரிக்க இருக்கும் இந்தப் படத்தில், கதாநாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Comments