12th of June 2013
சென்னை::மலையாள நடிகை ரம்யா நம்பீசன் ரகசியத் திருமணம் செய்து கொண்டு விட்டதாக தீக்குச்சி கிழித்துப் போட்டுள்ளனராம் மல்லுவுட்டில். ஆனால் அப்படியெல்லாம் இல்லீங்க என்று ரம்யா முணுமுணுக்கிறார்.
நடிகைகள் என்றால் நடிக்க மட்டுமல்ல, தங்களைப் பற்றி வரும் வதந்திகளையும், கிசுகிசுக்களையும் கூட சமாளித்தாக வேண்டும். அப்படி ஒரு நிலையை தற்போது சந்தித்துள்ளார் ரம்யா நம்பீசன்.
ரம்யாவுக்கு மலையாள நடிகர் ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை மறுக்கிறார் ரம்யா.
Comments
Post a Comment