18th of June 2013
சென்னை::நீ தானே என் பொன்வசந்தம் படத்தையடுத்து, கவுதம் மேனன் இயக்கும் படம், துருவ நட்சத்திரம். இப்படத்தில், பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால், படத்தின் நாயகி யார் என்பதில் மட்டும் முடிவெடுக்காமல் இருந்த கவுதம் மேனன், தன் "விண்ணைதாண்டி வருவாயா படத்தில் நடித்த த்ரிஷாவையே, இப்படத்திலும் நாயாகியாக்கலாம் என்று நினைத்தாராம். பின்னர் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பின், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அமலா பால் நடித்தால், கதைக்கு பொருத்தமாக இருப்பதோடு, தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழியிலும் வியாபாரத்துக்கு பலமாக இருப்பார் என்று முடிவெடுக்கப்பட்டதாம். இது குறித்து, அமலா பாலை அழைத்தும் பேசிவிட்டார்களாம். இதனால், "தலைவா படத்தையடுத்து, மீண்டும் ஒரு பெரிய பேனரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், உற்சாகத்தில் இருக்கிறார், அமலா பால்.
Comments
Post a Comment