கிளாமராக நடிக்க கேட்டால் வாய்ப்பை ஏற்க மாட்டேன்: நஸ்ரியா நாசிம்!!!

Monday,10th of June 2013
சென்னை::கிளாமராக நடிக்க கேட்டால் வாய்ப்பை ஏற்க மாட்டேன் என்றார் நஸ்ரியா நாசிம். ‘நேரம்Õ படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தற்போது தனுஷுடன் நய்யாண்டி, ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்ஹா படங்களில் நடிக்கிறார். அவர் கூறியது:

Ôதிருமணம் என்னும் நிக்ஹாÕதான் நான் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட படம். ஆனால் நேரம் படம்தான் முதலில் ரிலீஸ் ஆனது.  நடிகையாக வேண்டும் என்பது எனது எண்ணமல்ல. விஞ்ஞானியாவதுதான் எனது கனவு. ஆனால் என்னுடைய நேரம் சிறுவயது முதலே நடிக்க ஆரம்பித்துவிட்டேன். மக்கள் என்னவிதமான வேடங்களை விரும்புகிறார்களோ அதுபோல்தான் நடிப்பேன்.

குடும்ப பாங்கான கதாபாத்திரம்தான் எனக்கு பொருந்தும். கிளாமராக நடிக்க கேட்கும் எந்த படத்தையும் ஏற்கும எண்ணமில்லை. எனது பெற்றோர் எனக்கு துணையாக இருக்கிறார்கள். எனவே எனக்கான வேடங்களை எல்லை மீறி நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். அதிக எண்ணிக்கை படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மாட்டேன். நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன்.

Comments