ஏறுமுகத்தில் சிவகார்த்திகேயன்: 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'!!!

14th of June 2013
சென்னை::சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் first look poster நேற்று மாலை வெளியாகி இருக்கிறது.

இப்படத்தினை ராஜேஷிடம் உதவி இயக்குனராக இருந்த பொன்ராம் எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேஷ் இப்படத்திற்கு வசனங்கள் எழுதி கொடுத்து இருக்கிறார்.

'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர் நீச்சல்' ஆகிய படங்களுக்கு முன்பே இப்படத்தில் ஒப்பந்தமாகி விட்ட சிவகார்த்திகேயன், இப்படத்திற்காக 1.5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மற்றும் பணிகள் இன்னும் நடைபெற இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் மதன் பெரும் உற்சாகத்தில் இருக்கிறாராம். காரணம் என்ன தெரியுமா...? படம் சுமார் 12 கோடி ரூபாய்க்கு இப்போதே வியாபாரமாகி முடிந்துவிட்டது.

சிவகாத்திகேயன், சத்யராஜ், இயக்குனர் ராஜேஷின் ஒன் - லைன் வசனங்கள், இமான் இசை என அனைத்துமே இப்படத்திற்கு ப்ளஸாக அமைந்து இருப்பதால்தான், இவ்வளவு ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருக்கிறது என்
கிறார்கள்.

Comments