சூர்யா ஜோடியாக மௌனம் பேசியதே, ஆறு படங்களில் நடித்தவர் த்ரிஷா. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஜோடியாகும் வாய்ப்பு?!!!
13th of June 2013
சென்னை::சூர்யாவுடன் ஜோடி சேர அமலா பாலுடன் போட்டி போடுகிறார் த்ரிஷா.சூர்யா ஜோடியாக மௌனம் பேசியதே, ஆறு படங்களில் நடித்தவர் த்ரிஷா. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த படம் கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம். ஆனால் இதில் த்ரிஷா நடிப்பது 50 சதவீதம்தான் உறுதியாகியுள்ளது. காரணம், பட ஹீரோயின் வேடத்துக்காக அமலா பால் பொருத்தமாக இருப்பார் என்றும் யூனிட்டில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
அதனால் அமலா பாலிடம் கவுதம் தரப்பில் பேசப் பட்டுள்ளதாம். இது குறித்து அமலா பால் டுவிட்டரில் குறிப்பிடும்போது, நான் எதிர்பார்த்திருந்த நேரம் வந்துவிட்டது. முக்கியமான வாய்ப¢பை நான் பெறப்போகிறேன். உறுதியானதும் அது பற்றி விவரமாக சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதை அறிந்து த்ரிஷா அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், கவுதம் தரப்பிலிருந்துதான் அவரிடம் பேசப்பட்டதாம். அதனால் எப்படியும் இந்த வாய்ப்பை பெற வேண்டும் என போட்டி களத்தில் குதித்திருக்கிறார் த்ரிஷா.

Comments
Post a Comment