18th of June 2013
சென்னை::சசி இயக்கிய பூ படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்திருந்தவர் பார்வதி. அவரை படத்தில் பார்த்து விட்டு நேரில் பார்த்தால் ஆள்அடையாளமே தெரியாது. அந்த அளவுக்கு நிஜத்தில் மாடர்ன் யுக பெண்ணாக இருப்பார் பார்வதி. அதேபோல் தனுசுடன் நடித்துள்ள மரியான் படத்திலும் அவருக்கு மீனவ பெண் வேடம். அவர் நினைத்துகூட பார்த்திராத மாறுபட்ட கதாபாத்திரம்.
வழக்கமான, காதலியாகத்தான் வருகிறார் என்றாலும், விரட்டி விரட்டியடிக்கும் தனுசை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளில் இதுவரை சினிமா ரசிகர்கள் பாத்திராத வகையில் மெய்யாலுமே தத்ரூபமாக நடித்துள்ளாராம் பார்வதி. அவரது நடிப்பு பார்த்து பட டைரக்டர் பரத்பாலா பல இடங்களில் மெய்சிலிர்க்க வைத்து விட்டதாம்.
இதுபற்றி பார்வதி கூறுகையில், பூ படத்தில் நான் சிறப்பாக நடித்திருந்ததினால்தான், மரியான் படத்திற்கே என்னை புக் பண்ணினார்கள். இருப்பினும் மீனவ பெண் வேடத்தில் இவர் நடிப்பாரா? எனற தயக்கம் அவர்களிடம் இருந்தது. ஆனால் நான் நடிப்பு விசயத்தில், கேரக்டர் விசயத்தில் பந்தா பண்ணும் நடிகை இல்லை என்பதால், கடற்கரையோரத்தில் குடிசையில் வாழும் மீனவ பெண்ணாகவே நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று சொன்னேன். அதன்படி நடித்தும் காட்டினேன்.
இப்போது எல்லோரும் என் நடிப்பை பெருமையாக சொல்கிறார்கள் என்று சொல்லும் பார்வதி, தொடர்ந்து எந்த மாதிரியான கேரக்டர்கள் என்றாலும் அ

துவாகவே மாறி நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறி வருகிறார்.
Comments
Post a Comment