25th of June 2013
சென்னை::சாதாரணமாக சிம்பு யாருடனாவது நட்பு வைத்தால் ரொம்ப நெருக்கமாகி விடுவார். பிடிக்கவில்லையென்றால் அவர்கள் இருக்கிற பக்கமே திரும்ப மாட்டார். அப்படித்தான் நயன்தாராவுடன் ஒரு காலத்தில் ரொம்ப நட்பாக இருந்தார், அந்த நெருக்கமே நாளடைவில் அவர்களுக்கிடையே காதலை உருவாக்கியது. ஆனால் அவர்களின் காதல் மீது யார் கண் வைத்தார்களோ, குறுகிய காலத்திலேயே டமார் என்று வெடித்து சிதறியது. அதையடுத்து நயன்தாரா இருக்கிற பக்கமே சிம்பு திரும்பவில்லை.
இந்தநிலையில், இப்போது வாலு, வேட்டை மன்னன் படங்களில் தன்னுடன் நடித்து வரும் ஹன்சிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இதை பார்க்கிறவர்கள் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சிம்பு இதை மறுத்து வருகிறார். ஆனால் ஹன்சிகா தரப்பில் நோ ரியாக்ஷன்.
இருப்பினும், ஹன்சிகாவின் சினிமா கேரியருக்கு நிறைய அட்வைஸ் செய்கிறாராம் சிம்பு. அந்த வகையில், சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா ஜோடி சேரப்போகிறார் என்ற செய்தியைக்கேட்டு ஷாக் ஆகிவிட்டாராம் அவர். உடனே அவரை அழைத்து, மார்க்கெட் நல்லா போய்க்கிட்டிருக்கிற நேரத்தில் இப்படி துக்கடா நடிகர்களோட நடிச்சு உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கப்போறியா என்று தனது பாணியில் சொன்னாராம். அவர் கேள்விக்கு ஹன்சிகாவினால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லையாம்.
ஏற்கனவே அப்படத்தில் நடிப்பதற்கு ஏ.ஆர்.முருகதாசிடம் ஒப்புதல் தெரிவித்து விட்ட ஹன்சிகா, சிம்புவின் அறிவுரையா? சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா? எதை ஏற்பது என்பது புரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டு.

Comments
Post a Comment