சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் தீபிகாவின் பாட்டியாக மனோரமாவும், தந்தையாக சத்யராஜூம். தீபிகா தமிழ்ப்பெண்ணாக நடிப்பதால், படம் முழுக்க தமிழிலேயே பேசுகிறார்களாம்!!!
23rd of June 2013
சென்னை::ஷாரூக்கான் நடித்துள்ள படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு தீபிகாவின் பாட்டியாக மனோரமாவும், தந்தையாக சத்யராஜூம் நடித்துள்ளனர். கதைப்படி தீபிகா படுகோனே தமிழ்ப்பெண்ணாக நடிப்பதால், அவரது குடும்பத்தினர் படம் முழுக்க தமிழிலேயே பேசுகிறார்களாம். அதனால் படத்தில் பல காட்சிகளில் தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருக்கிறதாம்.

ஆனால், அப்படத்தின் இந்தி ட்ரெய்லரில் ஷாரூக்கான் பேசும் சில வசனங்களில் தமிழர்களை கிண்டல் செய்வது போல், இடம்பெற்றுள்ளதாம். இதற்கு இந்தி தெரிந்த மும்பை தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், படம் ரிலீசாகும் நேரத்தில் தமிழ் நாட்டிலும் பிரச்னைகள் வெடித்து படம் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காக, தான் தமிழர்களை கிண்டல் செய்யவில்லை என்று மறுத்துள்ளார் ஷாரூக்கான்.
மேலும், இதுவே சர்ச்சையாகி விடக்கூடாது என்பதற்காக, தமிழர்களை கூல் செய்வது போல் இன்னொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் அவர். அதாவது, டெக்னாலஜியைப் பொறுத்தவரை இந்தியாவில் தமிழர்கள்தான் சிறந்தவர்கள். அமெரிக்காவில் உள்ள நாசாவில் 75 சதவீதம் பேர் இந்தியாவிலுள்ள தமிழர்கள்தான் இருக்கிறார்கள். இதை ஸ்வதேஸ் படப்பிடிப்புக்காக அங்கு சென்றபோது நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட திறமையான தமிழர்களைப்போய் அதுவும் என் படத்திலேயே நான் கிண்டல் செய்வேனா என்றும் கேள்வி கேட்டிருக்கிறார் ஷாரூக்கான்.
Comments
Post a Comment