உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு ஜோடியாகிறார் திவ்யா!!!

27th of June 2013
சென்னை::உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு ஜோடியாக திவ்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஸ்வரூபம் 2 படத்தை தொடர்ந்து கமல் இயக்கி நடிக்க இருக்கும் திரைப்படம் உத்தம வில்லன். இதில் கமல் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத் தயாரிக்கிறது. இது பெரிய பட்ஜெட் படமாக தயாராக இருக்கிறது. படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என யோசித்திருக்கிறார்கள். ஆனால் காஜலோ நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா அல்லது லேகா வாஷிங்டனை நடிக்க வைக்கலாம் என்று கமல் தரப்பில் டிஸ்கஸ் செய்யப்பட்டு வருகிறதாம்! அதிலும் திவ்யாவுக்கு தான் முன்னுரிமை, திவ்யா மறுத்தால் லேவுக்கு போய்க்கொள்ளலாம் என்று கமல் கைகாட்டியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் இந்தவாய்ப்பை ரம்யா மறுக்க மாட்டார். காரணம் கமலின் கன்னட நண்பர் ரமேஷ் அரவிந்தும் திவ்யாவும் நெருங்கிய நண்பர்கள்! படப்பிடிப்பை அக்டோபரில் துவக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

Comments