12th of June 2013
சென்னை::கமல்ஹாசன் இப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தை பரபரப்பாக படமாக்கிக் கொண்டிருந்தாலும் இதற்கடுத்து அவர் இயக்கவிருக்கும் படத்தைப் பற்றிய செய்திதான் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து வருகிறது.
திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் படத்திற்கு ‘உத்தம வில்லன்’ என பெயரிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
கிரேஸி மோகன் கதை, வசனம் எழுது முழுக்க, முழுக்க நகைச்சுவைப் படமாகவே இது தயாராக உள்ளதாம்.
படத்தின் நாயகி யார் என்பது அடுத்த பேச்சாகவும் ஆரம்பமாகியது.
‘விஸ்வரூபம் 2’ வெளிவருவதற்கு முன்னதாகவே ‘உத்தம வில்லன்’ (?) செய்திகள் விஸ்வரூபம் எடுக்கலாம்.
Comments
Post a Comment