மீண்டும் படம் இயக்கும் ஸ்ரீப்ரியா!!!

Saturday,8th of June 2013
சென்னை::80களில் கொடி கட்டிப் பறந்த நடிகை ஸ்ரீப்ரியா. ரஜினிகாந்த், கமல்ஹாசன்,  சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்தவர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 300 படங்களுக்கும் மேல் நடித்தவர்.
 
இதற்கு முன் தமிழில் இரண்டு படங்களையும், கன்னடத்தில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்.
 
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கப் போகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகப் போகிறது.
 
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ 22 Female Kottayam’  என்ற படத்தைத்தான் ரீமேக் செய்து ஸ்ரீப்ரியா இயக்கப் போகிறார். இப்படத்தில் நடித்ததற்காக கேரள மாநில அரசில் சிறந்த நடிகைகக்கான விருதை ரீமா கல்லிங்கல் பெற்றார்.
 
அவர் நடித்த கதாபாத்திரத்தில் தமிழ், தெலுங்கில் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார்.விரைவில் மற்ற நட்சத்திரங்கள் , கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட உள்ளன.

Comments