இலியானாவுக்கு கிடைத்த வெற்றி!!!

17th of June 2013
 சென்னை::பாலிவுட், கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் நடிகையாக இருக்கிறார் இலியானா. பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் நடித்த ‘பர்ஃபி’ படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த ஹிட் இப்போது இலியானாவுக்கு மூன்று படங்களை பாலிவுட்டில் வழங்கி இருக்கிறது.
 
பாலிவுட் திரையுலகிற்குச் சென்றபிறகு என்னை நானே உணர ஆரம்பித்திருப்பதுடன் சுதந்திரமாகவும், உறுதியாகவும் இருப்பதாக உணர்கிறேன். பாலிவுட் என்றதும் நெருக்கமான நட்பு வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். அதனால் நண்பர்களைத் தேர்வு செய்தே பழகுகிறேன். அப்படித் தேர்வு செய்வதற்கு நிறைய அவகாசம் எடுத்துக் கொள்கிறேன். பிஸியாக இருந்தாலும் ஓய்வு எடுக்க விரும்பவில்லை" என்கிறார் இலியானா.

'நண்பன்' வெற்றிக்குப் பிறகும்கூட தமிழ் சினிமா பக்கம் ஆளைக் காணோமே என்று கேட்டால், "தமிழ் மட்டுமல்ல, தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. நல்ல கதை அமைந்தால் ஏற்று நடிப்பேன்" என்று சமர்த்தாகப் பதில் சொல்லி இருக்கிறார்.

Comments