13th of June 2013
சென்னை::சிம்பு, தனுஷ் என்று இளம் நடிகர்கள் போட்டி போட்டு, இசை ஆல்பங்கள் வெளியிடும் காலமிது. இந்த நேரத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இசை ஆல்பம் வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
இந்த ஆல்பம், "எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில் என்ற, கருத்தின் அடிப்படையில் உருவாகிறதாம். மேலும், இந்த ஆல்பத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று, அவரிடம் கேட்டனராம்.
அவரும் ஒப்புதல் கொடுத்துவிட்டாராம். இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் யுவன், இந்த ஆல்பத்தை ரகுமானின் "வந்தே மாதரம் போல், பிரபல படுத்தவேண்டும் என்று முழுவீச்சில் இறங்கியுள்ளார்.
Comments
Post a Comment