ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன்- தடாலடியாக சொன்ன ஹன்சிகா!!!

22nd of June 2013
சென்னை::ஆர்யாவுடன் ஹன்சிகா நடித்த படம் சேட்டை. இந்த படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. என்றாலும், அப்பட ஸ்பாட்டில் ஆர்யா செய்த குறும்புத்தனத்தை அவ்வப்போது பேட்டிகளில் சொல்லி வந்த அவர், ஆர்யா ஒரு ஜாலியான மனிதர். அவர் மாதிரி நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை என்று பெரிய பில்டப்களையெல்லாம் கொடுத்து வந்தார்.

இதனால், நாம் சும்மா ஒரு டைம்பாசுக்காக அடித்த ஜாலி, ஹன்சிகாவை அந்த அளவுக்கு பாதிச்சிருக்கா என்று தனது நட்பு வட்டாரங்களிடம் சொல்லி புல்லரித்து வந்தார் ஆர்யா. அதோடு, இந்த மாதிரி தனது புகழ் பாடுகிற நடிகைகளுடன்தான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், ராஜாராணியைத் தொடர்ந்து தான் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஹன்சிகாவுக்கு நேரடியாக சிபாரிசு செய்தாராம்.

தற்போது மார்க்கெட் உள்ள நடிகை என்பதால், அந்த பட நிறுவனமும் உடனே ஓ.கே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது சம்பந்தமாக ஹன்சிகாவை சந்தித்து பேசியபோது, தடாலடியாக மறுத்து விட்டாராம். காரணம், ஆர்யா நல்ல நடிகர்தான். ஆனால் அவருடன் நடித்த படம் ஓடவில்லை. அதனால், செண்டிமென்ட் சினிமாவில் ஓடுற குதிரைகளுடன் சேர்ந்து ஓடத்தான் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த செய்தி தோசையை மாற்றிப்போடுவது போல் ஆர்யாவிடம் சென்று புரட்டிப் போட்டபோது, அவருக்கு தூக்கிவாரிப்போட்டதாம். இது ஹன்சிகாவே சொன்னதா. இல்லை நீங்களாக பிட் போட்டுப்பார்க்கிறீர்களா? என்று நம்பிக்கையில்லாமல் கேட்டாராம். நம்பிக்கை இல்லையென்றால் நீங்களே விசாரித்துக்கொள்ளுங்கள் என்று அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல, நம்பி விட்டாராம் ஆர்யா. அதையடுத்து, நானும் ஓடுற குதிரையாகி விட்டு இது மாதிரி நடிகைகளுக்கு பதில் சொல்கிறேன் என்று வாயடைத்து விட்டாராம்.

Comments