Monday,11th of June 2013
சென்னை::மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் நடித்தபோது பெருத்துப் போயிருந்தார் ஹன்சிகா. அந்த குண்டு உடம்பே அவருக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று பலரும் சொன்னதால், உடம்பை அப்படியே பராமரித்து வந்தார் அவர். இருப்பினும், அதன்பிறகு இன்னும் உடம்பு ஒரு சுற்று பெருத்ததால், சில இயககுனர்கள் ஆன்ட்டி என்றே அவரை மறைமுகமாக அழைக்கத் தொடங்கினர். இதனால் தனது உடல் எடை அதிகமாக பெருத்துவிட்டதை புரிந்து கொண்ட ஹன்சிகா, அதையடுத்து சில மாதங்களாக உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று இடைவிடாமல் கடைபிடித்து சுமார் 5 கிலோ வரை உடல் எடையை குறைத்தார்.
இந்த சமயத்தில்தான் சூர்யாவுடன் சிங்கம்-2 படத்துக்கு கமிட்டானார் ஹன்சிகா.அப்படத்துக்கான காட்சிகள் படமாக்கப்பட்டபோது, ஒரு காட்சியில் ஹன்சிகாவை, சூர்யா அலாக்காக தூக்கி வருவது போல் படமாக்கினாராம் இயக்குனர் ஹரி. ஆனால், ஹன்சிகா உயரத்திற்கேற்ற நல்ல வெயிட்டான உடல்வாகு கொண்டவர் என்பதால், அவரை தூக்குவதற்கு சிரமப்பட்டாராம் சூர்யா.
என்றாலும், நாம சிங்கம், இதையெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது என்று உடம்பில் தெம்பை வரவழைத்துக்கொண்டு அவரை தூக்கியபடி நடித்தாராம் சூர்யா. ஆனாலும், ஓகே ஆக பல டேக்குகள் இழுத்ததால், அவருக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கி விட்டதாம்.
இதை கவனித்துவிட்ட ஹன்சிகா, இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது எந்த ஹீரோக்களுக்கும் நம்மால் சிரமம் ஏற்படக்கூடாது என்று இப்போது இன்னும் உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 5 கிலோ குறைத்தவர், இன்னும் ஒரு சுற்று குறைத்து 5 கிலோவை குறைக்கப்போகிறாராம். அதற்கான கட்டுப்பாடு பயிற்சிகளை தொடங்கி விட்டார் ஹன்சிகா.
Comments
Post a Comment