மௌனம் ரவி ராகவா இயக்கத்தில் சக்தி, பூர்ணா நடிக்கும் “படம் பேசும்”!!!

29th of June 2013
சென்னை::மௌனம் ரவி ராகவா இயக்கத்தில்
சக்தி, பூர்ணா நடிக்கும் “படம் பேசும்”ஆப்பிள் பிளாசம் கிரியேசன்ஸ் பி. லிட். பட நிறுவனம் சார்பாக எச்டி. நாராயணபாபு, பூர்ணிமா நாராயண், வாசன் எஸ்.எஸ் ஆகியோர் தயாரிக்கும் படம் “படம் பேசும்”.
இந்த படத்தில் சக்தி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பூர்ணா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக சங்கர் நடிக்கிறார் மற்றும் விவேக் , ஷாயாஜி ஷிண்டே , நாகபாபு ,ரியாஸ்கான் ,சித்தாரா,சீதா, இவர்களுடன் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு நிஷா கோத்தாரி நடனம் ஆடி இருக்கிறார்
 ஒளிப்பதிவு – P.K.H. தாஸ் ,இசை – மணி சர்மா ,எடிட்டிங் – சசிகுமார் , கலை – வீரசமர் பாடல்கள் – நா.முத்துக்குமார்,தாமரை. நடனம் – ஷோபி,அசோக் ராஜா ,தினா . ஸ்டன்ட் – ராஜசேகர் . வசனம் – ராகவா -குபேந்திரன்
நிர்வாக தயாரிப்பு ¬ – ரவி பர்னபாஸ்
தயாரிப்பு மேற்பார்வை – C.M . ஜெயராமன்
தயாரிப்பு நிர்வாகம் – p.s. ராஜேந்திரன்
இணை இயக்கம் – மனோன்.M. துணை இயக்கம் – ரஜினி ரமேஷ்
தயாரிப்பு – எச்.டி. நாராயணபாபு, பூர்ணிமா நாராயண், வாசன் எஸ்.எஸ்
எழுதி இயக்கி இருப்பவர் – ராகவா
படம் பற்றி இயக்குனர் ராகவா ….
இது பக்கா கமர்சியல் படம் ஷக்தியின் சினிமா கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும் பத்து கோடி செலவில் இந்த படம் தயாராகிக்கொண்டிருகிறது …
இது மாதிரி ஒரு படம் ஏற்கெனவே நாம் பார்த்தோமோ என்கிற எண்ணம் யாருக்குமே ஏற்ப்படாது புது மாதிரியாக இருக்கும் பக்கா ஆக்க்ஷன் கமர்ஷியல் படம்.
இந்த படத்திற்காக ‘’ கண்ணாமூச்சி ‘’
‘’ கண்ணாமூச்சி நீ தேட ,நான் தேட
காட்டில் விட்டாச்சு என்ற பாடல் காட்சியில் நிஷா கோத்தாரி ஆடி அசத்திவிட்டார் .படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்தது இறுதிக்கட்ட வேலைகளில் இருக் கிறோம் விரைவில் படம் வெளியாக இருக்கிறது என்றார் ராகவா

Comments