தினம்தோறும் ஒருவர், என்னை காதலிப்பதாக கூறுகின்றனர்:ஜே ஜே அமோகா!!!


18th of June 2013
சென்னை::ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அ‌மோகா. ஆனால் அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்திக்கு சென்றார். அங்கு தனது பெயரை நிஷா கோத்தாரி, பிரியங்கா கோத்தாரி என்று மாற்றிக்கொண்டார். அவ்வப்போது தமிழ் படங்களில் ஒரு பட பாடலுக்கு குத்தாட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறார். தற்போது படம் பேசும் என்ற படத்திற்காக ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்த அமோகாவை நாம் சென்று சந்தித்தோம், ஆட்டத்தின் ஓய்வின் போது நமக்கு அளித்த பேட்டி இதோ...

* பிரியங்கா கோத்தாரி, நிஷா கோத்தாரி, அமோகா உங்க பெயரில் இவ்ளோ குழப்பம் ஏன்?

அய்யோ, என் ஒரிஜினல் பேர் பிரியங்கா கோத்தாரி. இந்த பெயரில் பேர் எடுக்கவே ஆசைப்படறேன். நிஷா, அமோகா எல்லாம் படத்திற்காக உள்ள பெயர்கள். இனி இந்த பேர் குழப்பம் வராதுன்னு நினைக்கிறன்.

* மாதவனுடன் அறிமுகமாகி ரசிகர்களால் மறந்து போன நடிகை நீங்க மட்டும் தான் போல ?

உண்மைதான். என் முதல் படம் தமிழில் ஜே ஜே, நான் முதலில், கேமரா முன் நின்ன படம். அந்த படத்திற்கு பிறகு சரியா கவனம் செலுத்தல. பாம்பே போய்ட்டேன். இது வரை தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று 20 படங்களில் நடிச்சிட்டேன். இனி தமிழ்ல கொஞ்சம் கவனம் செலுத்தி நடிக்க விரும்புறேன். இனி மிஸ் பண்ண மாட்டேன்.

* ஹீரோயினா இருந்திட்டு ஒற்றை பாட்டுக்கு டான்ஸ் பண்றீங்களே? என்ன காரணம்?

கச்சேரி ஆரம்பம் படத்தில ஒரு பாட்டுக்கு டான்ஸ் பண்ணேன். இப்போ படம் பேசும் படத்தில் ஆடுறேன். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என் பிரண்ட்ஸ்  பாட்டை கொடுத்து முதல்ல கேக்க சொன்னாங்க. ரொம்ப பிடிச்சது. ஒரு படத்தின் மூலம் ரசிகர்களை மிஸ் பண்ணாலும் ஒரு பாட்டின் மூலம் ரீச் பண்ணிடலாம். அடிக்கடி அந்த பாட்டை கேக்கும் போது, பார்க்கும் போது, கண்டிப்பா என்னை மறக்கமுடியாதுன்னு நினைக்கிறன். சோ எஸ் சொல்லி படத்தில் ஆடியும் முடிச்சிட்டேன்.


* ரொம்ப வருஷமா இண்டஸ்ட்ரில இருக்கீங்க, இப்ப நிறைய புது முகங்கள் சாதிக்கிறாங்களே?

அது இப்போ மட்டும் இல்ல, எப்பவுமே இயக்குனரும் சரி, தயாரிப்பாளர்களும் சரி, நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்தவே விரும்புவாங்க. நானும் ஒரு புதுமுகமாகத்தானே வந்தேன். புதியவர்களும் இப்ப ரொம்ப திறமைசாலிகளா இருக்கிறாங்க. நிறைய சாதிக்கிறாங்க. ஒன்னு மட்டும் சொல்றேன், யாருக்குவாய்ப்பு கிடைக்குமோ, அவங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும்.


* நடிக்க நீங்க யாரிடமும் போய் வாய்ப்பு கேட்கிறீர்களா?

இல்லை. நான் தேடிப்போய் வாய்ப்பு கேட்டதில்லை. இதுவரை என்னை தேடி வந்த வாய்ப்புகளைத்தான் பயன்படுத்திருக்கேன். அதுவும் தமிழ்ல வாய்ப்பு கேட்கும் அளவிற்கு எனக்கு யாரையும் தெரியாது.

* ரசிகர்கள் தமிழ் இண்டஸ்ட்ரில நீங்க ஒரு ரவுண்டு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தாங்களே?

அப்படியா, கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கு. ஜே ஜே படத்தப்ப என்னை எல்லாரும் எதிர்பார்த்திருப்பாங்க. அந்த டைம் அவ்ளோவா எனக்கு எதுவும்  புரியல. பாம்பே போய்ட்டேன். ஆனா இன்னும் தமிழ் ஆடியன்ஸ் மனசில நான் இருக்கேன்னா அதுக்காக சந்தோஷப்படறேன். எனக்கும்  நிறைய தமிழ் படங்கள் பண்ண ஆசை இருக்கு. எதிர்காலத்தில் கண்டிப்பா நல்ல நல்ல படங்கள் பண்ணுவேன் என்ற நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்.

* இப்ப தமிழ யார்கூட நடிக்க ஆசைப் படறீங்க ?

ரஜினி சார் கூட ஒரு படமாவது நடிக்க ஆசை இருக்கு. அப்புறம் சூர்யா, அஜித் , விஜய் படங்கள் பார்க்கிறப்ப அவங்க கூடல்லாம் நடிக்கணும் என்ற ஆசை இருக்கு.

* தெலுங்கு, கன்னடத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய  பெரும்  வெற்றிபெற்ற தண்டுபால்யா (கரிமேடு )படத்தில் நடித்த  அனுபவம் ?

அந்த படம் இப்போ நினைச்சாலும் பயம் வரும்,  உண்மை சம்பவம் படமாக எடுக்கப்பட்டது. எனக்கு கொஞ்சம் ரோல் குறைவு தான் , ஆனால் நல்ல பேர் கிடைத்த படம். இயக்குனர் கதை சொன்ன போதே, படத்தில உங்களுக்கு கற்பழிப்பு சீன் இருக்கு, ஆனா அது படத்தில் ரொம்ப முக்கிய இடம்னு சொன்னார், நடிக்க  கொஞ்சம் பயந்தேன். ஆனா படம் வெளி வந்து கதையோட பார்க்கும் போது அந்த காட்சி படத்திற்கு எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சது. அப்படி ஒரு படம் பண்ணியதில் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ரசிகர்களும் என் நடிப்பை ரொம்ப பாராட்டுறாங்க.

* நிறைய கிசுகிசுக்கள் உங்கள பத்தி அப்பப்போ வரும். காதல் பத்தி நீங்க சொல்லுங்க.

தினம் யாரவது ஒருத்தர்  எனக்கு லவ் சொல்லிட்டு தான் இருக்காங்க,அப்படி யாரும் சொல்லலன்னு  சொன்னாதான் அது என்னை இன்சல்ட் பண்ற மாதிரி. ஆனா எனக்கு பிடிச்ச  ஒரு ஸ்பெஷல் ஆள் இன்னும் கிடைக்கல. பாம்பேல நிறைய பேர் சொல்லிட்டாங்க, லவ் ஒவ்வொருத்தர்  வாழ்க்கையிலும் ரொம்ப முக்கியம்னு நினைக்கி‌றேன். என் திருமணம் அரேஞ்ச்டு திருமணமா முடிவு பண்ணா கூட, திருமணத்துக்கு முன்னாடியே பார்த்து பேசி பழகி ஒருவரை ஒருவர் புரிஞ்சிட்ட அப்பறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.

* எந்த மாதிரி காஸ்ட்யூம் உங்களுக்கு பிடிக்கும்?

எனக்கு  தமிழ் நாட்டு பாவாடை தாவணி ரொம்ப பிடிக்கும். அதுக்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கல. உண்மையை சொல்லனும்னா, தமிழ் நாட்டில் கிடைக்கும் மதிப்பு, மரியாதை, அவங்க அன்பு வேற எங்க தேடினாலும் கிடைக்காது. அதுக்காகவே தமிழ்ல நிறைய படங்கள் பண்ண ஆசைப் படறேன்.

* உங்க கிளாமர் லிமிட் சில டைம் கொஞ்சம் ஓவரா இருக்கே ?

நடிக்கண்ணு வந்திட்டா கிளாமர் அது இதுன்னு கொஞ்சம் இருக்கும். படத்திற்கு, அந்த காட்சிக்கு என்ன தேவை, எவ்ளோ தேவை  என்பது முக்கியம். என்கிட்ட நீச்சல் உடை கொடுத்து நடிக்க சொன்னால் கூட, அதை சரியான முறையில் பயன்படுத்த நினைப்பேன். படத்தில் பார்க்கும் போது ஒரு அருவருப்பு  வந்திடக்கூடாது. எப்பவும் கிளாமர் சீன், அல்லது கிளாமர்  உடை என்றால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கொஞ்சம் பிளான் பண்ணிட்டா ஈஸி.

* உங்க எதிர்கால திட்டம் ஏதும் இருக்கா ?

தினம் சந்தோஷமா நான் பார்க்கிற  வேலையில, சம்பளத்தோட வாழ்க்கையை என்ஜாய் பண்றேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடன் இருக்கேன். பாட்டு கேக்குறேன். யோகா பண்றேன், ஜிம் போறேன். இந்த நாட்கள் சந்தோஷமா இருக்கு. எதிர்காலம் பத்தி யோசிக்க முடியல. ஒரு டைமுக்கு மேல கல்யாணம் பண்ணிட்டு, செட்டில் ஆகிடுவேன். சினிமா, நடிப்பு இப்படி எதிலும் இல்லாம சினிமால இருந்து விலகி போய் வாழ ஆசைப்படுவேன். ஆனா அதுக்கு நிறைய டைம் இருக்கு.

Comments