கோபத்தில் இருக்கும் விஷால்!!!

Sunday,2nd of June 2013
சென்னை::'பட்டத்து யானை' படம் தன்னை பெரிய அளவில் நிரூபிக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார் விஷால். படத்தின்  முதல் பாதியில் சமையல்காரன், இரண்டாம் பாதியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் என்று நடிக்கும் விஷால் படத்தில் வரும் பெரிய ட்விஸ்ட் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் என்று சொல்லி வருகிறார். பூபதிபாண்டியனுடன் இணைந்திருக்கும் விஷால் படத்தில் சந்தானம் இருப்பதால் சந்தோஷமாக இருந்தாராம். ஆனால், அதுவே தற்போது பிரச்சனை ஆகிவிட்டது. அப்பா, மகன் என்று இரண்டு கேரக்டர்களில் வரும் சந்தானத்தின் போர்ஷன்கள் படத்தில் அதிகம் வருகிறதாம். ஹீரோவைக் காட்டிலும் காமெடி நடிகருக்கு இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்தால் எப்படி? சந்தானத்துக்கு அதிக ஸ்கோப் கொடுக்க வேண்டும் என்பதற்காக எனக்கு ஸ்கோப் இல்லாமல் செய்வது சரியில்லை என்று கோபமுகம் காட்டுகிறார் விஷால்.

Comments