லட்சுமி மேனன் தளர்வான பேச்சு: சிக்கல்!!!

12th of June 2013
சென்னை::கோலிவுட்டில் கோலாகலமாக வளர்ந்து நிற்கும் ஒரு நடிகை தான் லட்சுமிமேனன். எந்தவித பந்தாவோ, பகட்டோ இல்லாமல் வளர்ந்திருக்கும இவரிடம் லூஸ் டாக்தான் கொஞ்சம் ஓவர் என்கிறார்கள். அதாவது, யாராவது அம்மணியின் வாயை கிளறி விட்டால் போதுமாம் எப்எம் ரேடியோ போன்று மணிக்கணக்கில் சதா வாயாடிக்கொண்டேயிருப்பாராம். நடிகையின் இந்த வீக்னெஸ் தெரிந்த சில கோலிவுட் அடிபொடிகள், உடன் நடிக்கும் நாயகர்களைப்பற்றி அவரிடத்தில் கருத்துக்கேட்கப்போக, அவர்களின் நடிப்புத்திறமையில் தொடங்கி தான் நன்றிக்கடன் பட்டிருப்பது வரை பக்கம் பக்கமாய் புகழ்மடல் வாசிக்கிறாராம்.
 
ஆனால், அப்படி பேசும்போது சில சமயங்களில் மேற்படி நடிகர்கள் தங்களது பேமிலி பற்றி அம்மணியின் காதுகடித்த சில சீக்ரெட்டுகளையும் பத்தோடு பதினொன்றாக எடுத்து விடுகிறாராம் நடிகை. இது அவர்களின் போதைக்கு ஊறுகாய் போலிருக்க, அதை சினிமா வட்டாரங்களில் நொறுக்கு தீனி போல் மேற்படி அடிபொடிகள் அள்ளி விடுகிறார்களாம்.
 
இந்த சேதி கோடம்பாக்கம் முழுக்க ஒரு சுற்று சுற்றி கடைசியாக மேற்படி நடிகர்களின் காதுகளுக்கு வரும்போது கடுப்பாகி விடுகிறார்களாம். இது எப்படி லீக்காகியது என்று அவர்கள் புலனாயவு செய்யும்போது, லட்சுமிகரமான நடிகையிடம் உளறி கொட்டியது அவர்களின் ஞாபகத்துக்கு வர, தப்பு பண்ணிட்டோமே என்று டென்சனாகி நிற்கிறார்கள்..
 
ஆக. பத்தாம் வகுப்பு படிக்கும் நடிகையின் பக்குவமில்லாத மனநிலையை புரிந்து கொண்ட யாரும் அவரிடம் அதிகமாக பேசுவதில்லை. திடீரென்று உடன் நடிப்பவர்கள் உஷார் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதால், எதற்காக இப்படி நம்மைப்பார்த்தால் உர்ரென்று இருக்கிறார்கள் என்பது புரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் கும்கி நடிகை.
 

Comments