Monday,3rd of June 2013
சென்னை::ஆரம்பத்தில் காமெடி காட்சி மற்றும் டயலாக்குகளில் ஒரு எல்லைக்கோடு வைத்தே நடித்து வந்தார் சந்தானம். ஆனால், போகப்போக அவர் என்ன பேசினாலும் ரசிக்கத்தொடஙகி விட்டார்கள் ரசிகர்கள். இதனால், நாளடைவில் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகளிலும் நடிக்கத் தொடங்கினார் சந்தானம்.
உதாரணமாக, அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சொந்த தங்கைகள் முன்பே ஆபாசமாக பேசி நடித்தார். மேலும், சேட்டை படத்தில் லூஸ் மோஷனாகி எந்நேரமும் டாய்லெட்டிலேயே கிடந்தார். இதைப்பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கப்போகிறார்கள் என்றுதான் நினைத்தார் சந்தானம். ஆனால் அனைவரும் அந்த காட்சிகளை அருவருப்பாக குறிப்பாக முக்கைப்பொத்திக்கொண்டே அந்த காட்சிகளை பார்க்கும் மனநிலையுடன்தான் தியேட்டருக்குள் இருந்தார்கள்.
பின்னர், இந்த காட்சிகளுக்கு கல்லூரி பெண்கள் மத்தியில் இருந்து நேரடியாகவே சந்தானத்துக்கு விமர்சனங்கள் வந்ததாம். அதனால் இனிமேல் காமெடி காட்சிகளை ரொம்ப கவனமாக கையாளப்போகிறாராம் சந்தானம். முக்கியமாக, அசிங்கமான, கொச்சையான வசனங்களை பேசி நடிக்கப்போவதில்லை என்றும் புதிய உறுதிமொழியை எடுத்துள்ள சந்தானம், பெண்களை கவரும் வகையிலான காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம்.

Comments
Post a Comment