கௌதம் பாராட்டிய புதிய இயக்குனர்!!!

Saturday,8th of June 2013
சென்னை::தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் அவருடைய போட்டோன் கதாஸ் நிறுவனம் மூலமாக தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார்.
 
ராம் இயக்கி நாயகனாக நடிக்கும் ‘தங்க மீன்கள்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
 பிரேம் சாய் இயக்கத்தில் பின்னணி பாடகர் கார்த்திக் இசையில் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் இயக்குனர் பிரேம் சாய், பிரபு தேவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
 பிரேம் சாய்  என்னை மிகவும் கவர்ந்த திறைமையான இயக்குனர் .எதையும் திட்டமிட்டு  நேர்த்தியுடன்  செயல் பட்டு வரும் அவருடைய தொழில் நேர்த்தி,. தெளிவான சிந்தனை ,தன்னுடைய கதையின் மேல் அவர் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கை ,மற்றும் எண்ணத்தையும் எழுத்தையும் படமாக்கும் திறமை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது,” என்று பாராட்டுகிறார் படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன். 
 ஜெய், யாமி கௌதம், சந்தானம், விடிவி கணேஷ், நாசர், அஷுடோஷ் ரானா, தம்பி ராமையா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ‘ரஷ்’ பார்த்த பிரபு தேவா அடுத்து இயக்கப் போகும் ஹிந்திப் படத்தில் யாமி கௌதமை நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தெலுங்கில் இப்படம் நானி நடிக்க ‘கொரியர் பாய் கல்யாண்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
 
 

Comments