சரண் லவ் கிரீம் பிஸ்கெட்'--ஜப்பானில்!!!

14th of June 2013
சென்னை::ராம் சரண் தேஜாவின் புகழைப் பயன் படுத்தி ஜப்பானில் புதிய பிஸ்கெட் ஒன்று அறிமுகமாகியுள்ளதாம்.

‘முத்து' படம் வந்த புதிதில் ஜப்பானில் ரஜினி பிரபலமானார். இப்போது அவருக்கு அடுத்தபடியாக ‘ மஹாதீரா' படம் மூலம் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவும் ஜப்பானில் பிரபலமாகி வருகிறார்.

இதனால், ராம் சரண் தேஜாவை வைத்து காசு பார்க்க ஆசைப்பட்ட பிஸ்கெட் கம்பெனி ஒன்று புதிய பிஸ்கெட் ஒன்றை அவரது பெயரிலேயே அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானில் ராம் சரண்... சமீபத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடித்த ‘மஹதீரா' சப் டைட்டில் சகிதமாக ஜப்பானில் வெளியானது. அதில், ராம் தேஜாவின் அழகையும், நடிப்பையும் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் பலர் அவரது தீவிர ரசிகர்களாகி விட்டார்களாம்.

சரண் லவ் கிரீம் பிஸ்கெட்... இதை தங்களுக்கு சாதகமாக மாற்ற முடிவெடுத்த ஜப்பானின் பிரபலமான உணவு தயாரிப்பு நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பிஸ்கெட் ஒன்றின் கவரில் ராம் சரண் தேஜாவின் புகைப்படத்தை போட்டுள்ளதோடு, பிஸ்கெட் பெயரையும் ‘ சரண் லவ் கிரீம் பிஸ்கெட்' என்றே வைத்துள்ளனராம்.

Comments