18th of June 2013
சென்னை::பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மரியான்' இந்த மாதம் 21-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்து இருந்தார்கள்.
ஆனால், சென்சார் போர்டு இன்னும் சான்றிதழ் வழங்காததால் ஒரு வாரத்துக்கு ரிலீஸ் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதேசமயம் இந்தியில் தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள 'raanjhanaa' 21-ம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'raanjhanaa', 'மரியான்' இரண்டு படங்களுமே 21-ம் தேதி ரிலீஸாக இருந்ததால், 'raanjhanaa'-வின் தமிழ் டப்பிங்கான 'அம்பிகாபதி' ஒரு வாரத்துக்குப் பின் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது 'மரியான்' ரிலீஸில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் 'raanjhanaa' வெளியாகும் அன்றே 'அம்பிகாபதி'யும் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் இந்திப் படம் என்பதால் 'raanjhanaa' படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டிருக்கும் தனுஷ், இதுவரை 'மரியான்' பட புரோமோஷன் தொடர்பாக எதுவும் செய்யவில்லையாம்.
எனவே, 21-ம் தேதி 'மரியான்' ரிலீஸாகாது என அடித்துச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Comments
Post a Comment