இங்க என்ன சொல்லுது படத்துக்காக சிம்பு பாடிய "குட்டி பயலே... குட்டி பயலே"!!!

13th of June 2013
சென்னை::இங்க என்ன சொல்லுது படத்துக்காக சிம்பு ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
 
தற்போதைய நாட்களை பொறுத்தவரை சிம்பு செய்தியில் இல்லாத நாளே இல்லைணு சொல்லலாம். திடீர் ஆன்மீக பயணம், படங்களைப் பற்றி வரும் சர்ச்சை, திருமணம் என நாள்தோறும் அவரைப் பற்றி புதிது புதிதான  செய்திகள் உலவி வருகின்றன.
 
இருப்பினும் சிம்பு இவற்றில் எதையும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அவருடைய வேலையை செய்துகொண்டேதான் இருக்கிறார். சிம்பு ஏற்கெனவே இங்க என்ன சொல்லுது படத்தில் சிம்பு ஹெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் இப்போது படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார்.
 
"குட்டி பயலே... குட்டி பயலே" எனத் தொடங்கும் அந்தப் பாடலை தானே எழுதி பாடவும் செய்திருக்கிறார். இந்தப்பாடல் படத்தின் ஹைலைட் பாடலாக அமையும் என்கிறார்கள். வின்சென்ட் செல்வா இயக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில் வி.டி.வி கணேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இதன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments