‌ஜி.வி.பிரகாஷ், சைந்தவி திருமணம் - பிரபலங்கள் பங்கேற்பு!!!

27th of June 2013
சென்னை::இசையமைப்பாளர் ‌ஜி.வி.பிரகாஷ்குமார், பாடகி சைந்தவி திருமணம் இன்று காலை மேயர் ராமநான் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
 
ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை பள்ளி நாட்களிலேயே காதலித்து வந்தார். இந்த காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டதையடுத்து இன்று இருவருக்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் திருமணம் நடந்தது.
 
இதில் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், பாடகர்கள், பாடலாசி‌ரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comments