Sunday, June 16, 2013
சென்னை::'பவித்ரா' என்ற தெலுங்குப் படத்தில் விலைமாதுவாக நடித்துள்ள ஸ்ரேயா, விலைமாது போன்ற வேடங்களில் தான் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
தெலுங்குப் படமான பவித்ரா தமிழிலும் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் ஸ்ரேயா விலைமாதுவாக நடித்துள்ளார். இது குறித்து பலர் ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம், மேலும் திரையுலகினரே சிலர், ஸ்ரேயாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அதனால் தான் இதுபோன்ற கதாபாத்திரங்களில் கவர்ச்சியாக நடித்து வாய்ப்பு பெற நினைக்கிறார் என்று கிசு கிசுக்க, இது ஸ்ரேயா காதுக்கு போக, கொதித்தெழுந்த ஸ்ரேயா, இது தொடர்பாக தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய ஸ்ரேயா, "விலைமாது கதாபாத்திரத்தில் கவர்ச்சியாக நடிக்கவில்லை. ஆடை குறைப்பு ஏதும் செய்யவில்லை. முக பாவம் மூலம்தான் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன். விலைமாதுவாக நடித்ததை சிலர் மோசமாக பார்க்கின்றனர். அப்படி நடிப்பது தவறல்ல, இது போன்ற வேடங்களில் தான் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியும்." என்றார்.

Comments
Post a Comment