நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆர்ப்பாட்டமாக துவங்கினாலும், அதில், அவருக்கு போதிய மகிழ்ச்சி இல்லையாம்!!!
Monday,3rd of June 2013
சென்னை::நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆர்ப்பாட்டமாக துவங்கினாலும், அதில், அவருக்கு போதிய மகிழ்ச்சி இல்லையாம். தற்போது அவர் நடித்து வரும் படங்களில், அவருக்கு முக்கியமான கேரக்டர்கள் தான் என்றாலும், இளம் நடிகைகளுக்கு தான், முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளதாம். "வலை படத்தில், டாப்சிக்கும், "ராஜா ராணி படத்தில், நஸ்ரியாவுக்கும், ஹீரோக்களுடன் ஆடிப் பாடும் கேரக்டர்களாம். ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் என்பதால், தனக்கு, போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என, கருதுகிறாராம், நயன்தாரா. இதனால், இனிமேல், படங்களை ஒத்துக் கொள்ளும்போது, ஹீரோயின்களுக்கு அதிக வாய்ப்புள்ள கதையாக இருக்கும்படி, பார்த்துக் கொள்வது என, முடிவு செய்துள்ளாராம்.
Comments
Post a Comment