இயக்குனர் ஆகிறார் பிரியங்கா திரிவேதி!!!

14th of June 2013
சென்னை::பிரியங்கா திரிவேதியை ஞாபகம் இருக்கிறதா? ‘ராஜ்ஜியம்’, ‘ராஜா’, ‘காதல் சடுகுடு’ படங்களில் நடித்தவர். இவர் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் நடிப்பை கைகழுவவில்லை. அடுத்து படம் இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
 
இதுபற்றி அவர் கூறியது:‘எனிமி’ இந்தி படத்தில் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கவுரவ வேடத்தில் நடித்தேன். ஓய்வு நேரங்களில் சில கதைகள் எழுதினேன். ஆக்ஷன் கலந்த காதல் கதை ஒன்று ரெடியாக இருக்கிறது. ஒரு படம் இயக்கவும் முடிவு செய்திருக்கிறேன்.
 
தற்போது எனது பிள்ளைகள் வளர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உலக விஷயங்கள் எவ்வளவு கற்க விரும்புகிறார்களோ அந்தளவுக்கு கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். புதிய இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்வேன். குறிப்பாக சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களுக்கு சென்றால் அவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய புதிய பரிமாணங்களை அறியும் வாய்ப்பு கிடைக்கும்.

Comments