கப்பர் சிங் படத்தின் இரண்டாம் பாகம்: ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம்!


19th of June 2013
சென்னை::பாலிவுட்டில், "லக் என்ற படத்தின் மூலம், முதல் முறையாக வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார், ஸ்ருதி ஹாசன். ஆனால், "லக் திரைப்படம், ஸ்ருதிக்கு, "லக்தேடித் தரவில்லை. இந்தநேரத்தில், பவன் கல்யாணுடன் நடித்த, "கப்பர் சிங் என்ற தெலுங்கு படம், ஆந்திராவின் மூலை முடுக்குகளிலெல்லாம், வசூலை வாரி குவித்ததால், தெலுங்கில், முன்னணி நடிகையாகி விட்டார், ஸ்ருதி.
 
தற்போது, "பலுபு, யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா ஆகிய தெலுங்கு படங்களிலும், "டி-டே என்ற, பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், "கப்பர் சிங் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இதிலும், பவன் கல்யாண் தான், ஹீரோ. காஜல் அகர்வாலை ஹீரோயினாக நடிக்க வைக்க,பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், அவர்கேட்ட சம்பள தொகையால், தலை தெறிக்க ஓடி வந்து விட்டாராம், படத் தயாரிப்பாளர். இதனால், மீண்டும் ஸ்ருதி ஹாசனை  ஓப்பந்தம் செய்துள்ளனர். 

Comments