Monday,10th of June 2013
சென்னை::பிரபல நடன இயக்குனர் எம்.சுந்தரம். இவரது மகன்கள் ராஜூசுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத். மூவரும் நடன இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள். இவர்கள் நால்வரும் இணைந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ‘எம்.எஸ்.எம் நடனப் பள்ளி’ தொடங்கியுள்ளனர்.

இதில் நடனம் கற்றவர்களின் திறமைகளை அறிமுகம் செய்யும் விழா, சென்னை கிருஷ்ண கான சபாவில் நடந்தது. பரத், நிகிஷா பட்டேல், சங்கீதா, கிரிஷ், ரகுராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாகேந்திர பிரசாத் கூறும்போது, ‘நான் லண்டனில் மாஸ்டர் ஆஃப் கொரியோகிராபி படித்து டிகிரி வாங்கினேன். நான் கற்ற வித்தைகளை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க என் சகோதரர்களுடன் இப்பள்ளியை தொடங்கியுள்ளேன்.
ராஜூசுந்தரம், பிரபுதேவா இங்கு வருவார்கள். நடனம் பற்றிய டிப்ஸ்கள் கொடுப்பார்கள். நடனம் என்பது தியானம் போன்றது. வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்னைகளை மறக்க வைக்கும் சக்தி அதற்கு உண்டு’ என்றார்.
Comments
Post a Comment