அஜீத் நடிக்கும் ‘வினாயகம் பிரதர்ஸ்’ படத்தின் படப்பிடிப்புகள் துவக்கம்!!!

25th of June 2013
சென்னை::விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில், அஜீத் அடுத்து, ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் ‘வினாயகம் பிரதர்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள படத்தின் இறுதிகட்ட வேலைகளில் படக்குழுவினர் படு பிஸியாக இயங்கி வருகின்றனர்.
 
இந்நிலையில் அஜீத்தின் 53-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் வாங்கியிருப்பதாக கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் ‘தலைவா’வை தொடர்ந்து அஜீத் படத்தையும் ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட இருப்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments