சென்னையில் நடந்த ஜில்லா படப்பிடிப்பில் விஜய்!!!

Monday,3rd of June 2013
சென்னை::சென்னையில் நடந்த ஜில்லா படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டார்.
 
அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து விஜய்-காஜல் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது.
 
டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அண்மையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடந்து முடிந்தது. இதில் விஜய் தவிர்த்து மற்ற நடிகர்கள் பங்கேற்றனர்.
 
இந்நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்காத விஜய் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.
 
ஜில்லா படத்தில் விஜய் ஷக்தி என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். படம் மதுரையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

Comments