23rd of June 2013
சென்னை::கந்தன் கியர் அப் என்டர்டெய்ன்மென்ட் சார்பாக ரமணன், ஜவஹர் இணைந்து தயாரிக்கும் முதல் படம் ‘ஒரு மோதல் ஒரு காதல்’.
சென்னை::கந்தன் கியர் அப் என்டர்டெய்ன்மென்ட் சார்பாக ரமணன், ஜவஹர் இணைந்து தயாரிக்கும் முதல் படம் ‘ஒரு மோதல் ஒரு காதல்’.
விளம்பர உலகில் ஐந்து வருட அனுபவம் கொண்ட கீர்த்தி குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தயானந்த் பிறைசூடன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இதுவரை நீங்கள் பார்த்திராத நகைச்சுவை கலந்த காதல் கதை இப்படம். புதியதொரு அழகான காதல் பயணமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் கீர்த்தி குமார். சூரிய நகரம், நாங்க போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆர். விவேக் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகிறார். பல விளம்பரப்படங்களில் நடித்துள்ள மும்பை மாடலான மேகா பர்மன் கதாநாயகியாக நடிக்கிறார்.பிரமீட் நடராஜன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வித்தியாசமான காதல் பயணம். அதனால் அவன் குடும்பத்தினருக்கும், அவனது நண்பர்களுக்கும் ஏற்படும் தொல்லைகள், தன்னுடைய காதலை அடைவதற்கு அவன் செய்யும் குறும்புகள் என பல சுவாரசியங்களைக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘ஒரு மோதல் ஒரு காதல்’
Comments
Post a Comment