விஜய் என்னம்மா என்றார் அமலாபால் உருகி நின்றார்!!!

28th of June 2013
சென்னை::விஜய் நடித்துள்ள, "தலைவா படத்தில் மாடர்ன் கெட்டப்பில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அமலா பால். இதே படத்தில், ராகினி என்ற இன்னொரு ஹீரோயினும் இருந்த போதும், அமலாவே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
அவர் கூறுகையில்,"தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான விஜயுடன் நடிப்பது என், திரையுலக வாழ்க்கையில், மறக்க முடியாத சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அதோடு, ஒரு படத்திலாவது, விஜயுடன் நடித்துவிட வேண்டும் என்ற கனவும் நனவாகியுள்ளது. 
 
முதலில், விஜயுடன் நடிக்க  வேண்டும் என்றதும், மனதளவில் பயம் பற்றிக் கொண்டது. ஆனால், அவர் என்னிடம் ரொம்ப அன்பாக பேசி பழகினார், நான் ஏதாவது கேட்டால், என்னம்மா என்று பாசத்தோடு கேட்பார். அதனால், விஜய் மீது, அன்பு கலந்த மரியாதை ஏற்பட்டது என்று சொல்லும் அமலா பால், "நான் இதுவரை நடித்த ஹீரோக்களில், விஜய் ரொம்ப இனிமையானவர் என்கிறார்.

Comments