ஸ்ரேயா பட இயக்குனர் - ஹீரோ மோதலால் பரபரப்பு!!!

25th of June 2013
சென்னை::ஸ்ரேயா படத்தை இயக்கும் பெண் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளவரசி வேடத்தில் ஸ்ரேயா நடிக்கும் படம் சந்தரா. தமிழ், கன்னடத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தை ரூபா அய்யர் இயக்குகிறார். பிரேம், யாஷ் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
 
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பட ரிலீசுக்கு முன்பான விளம்பர நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்ரேயாவை மட்டும் அழைக்கும் இயக்குனர், 2 ஹீரோக்களையும் புறக்கணிக்கிறாராம். குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளில் பிரேமுக்கு மட்டும் அழைப்பு விடுக்கிறாராம். இதனால் 2 ஹீரோக்களும்  மனகசப்பில் உள்ளனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி களில் பிரேம், யாஷ் இருவரும் பங்கேற்க மறுத்துவிட்டார்களாம்.  ஹீரோ யாஷ் கூறும்போது, இப்படத்தில் எனக்கு சிறிய வேடமே தந்திருக்கிறார்கள் என்றாலும் என்னை இயக்குனர் ரூபா படம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. படத்தில் நான் நடித்திருந்தாலும் இயக்குனரின் அழைப்பு இல்லாமல் நான் எப்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும். என்னை புறக்கணிப்பது மன வருத்தம் அளிக்கிறது என்றார். இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

Comments