சமீபமாக திரைப்படங்களில் கதையின் நாயகனுக்கு இணையாக கதாபாத்திரங்கள்: தீயா வேலை செய்யும் கணேஷ் !!!


12th of June 2013
சென்னை::சமீபமாக திரைப்படங்களில் கதையின் நாயகனுக்கு இணையாக கதாபாத்திரங்கள் படைக்கபடுவதும் , அந்த பாத்திரங்களில் சோபிப்பவர் மக்கள் மத்தியில் பேசப்படுவதும் சரளமாகி விட்டது . அறிமுகமான ‘அபியும் நானும் ‘ முதல் கமலஹாசன் மோகன்லால்நடிப்பில் உருவான ‘உன்னை போல் ஒருவன் ‘, வெளி வர இருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு ‘ , ‘சந்திரா ‘ முதல்’ எங்கேயும் எப்போதும் ‘ சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லிங்குசாமியின் ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன்
 
இதைப் பற்றிப் பேசும் போது நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது , அதிலும் நல்ல இயக்குனர் , நல்ல தயாரிப்பு நிறுவனம் என்றக் கூட்டணியுடன் அமைவது என்பது அறிய வரம் , எனக்காக படம் ஓடும் காலம் வரும் வரை ஓடும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள் !!!மேற்கூறிய ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காட்டும் . இணை நாயகன் , துணை நாயகன் என இல்லாமல் படம் பார்க்கும் எல்லோரையும் என் கதாப்பாத்திரம் கவர வேண்டும் , அதுதான் என் உண்மையான வெற்றி . மக்கள் மத்தியில் என் முகம் பிரபலமாக , பிரபலமாக என்னை கதாநாயகனாக வைத்து கதைகள் எழுதி வரும் இயக்குனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் .
 
மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எனக்கு தமிழ் மொழி அந்நிய மொழி இல்லை , மிகவும் பரிச்சயம்மான மொழி. இன்று எனக்கு தமிழ் மொழி பிரசித்தம் . ‘ தீயா வேலை செய்யணும் குமாரு ‘ படத்தில் எனக்கு கிட்டிய வாய்ப்பு என்னை தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, இனிமேல் இடைவெளி இல்லாமல் நானும் தீயா வேலை செய்யணும் என்று பெருமிதத்துடன் கூறினார் கணேஷ் வெங்கட்ராமன்.
 
 

Comments