ஆர்.கே.கலைமணி இயக்கத்தில். ‘ஆப்பிள்பெண்ணே’!!!

23rd of June 2013
சென்னை::ஆர்.கே.கலைமணிஇயக்கத்தில்‘ஆப்பிள்பெண்ணே’
கே.ஜி.பிபிலிம்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக கே.ஜி.பாண்டியன் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படத்திற்கு ‘ஆப்பிள்பெண்ணே’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
 
இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் எங்கேயும்எப்போதும், வத்திக்குச்சி படங்களில் முக்கியகதாபாத்திரத்தில் நடித்தவர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜா, கிளாமர் வேடத்தில் நடிக்கிறார்.இதுவரை ஏற்றிராத வித்தியாசமான ஏட்டு வேடத்தில் தம்பிராமைய்யா நடிக்கிறார்.மற்றும் கே.ஜி.பாண்டியன், ஆர்.தெய்வேந்திரன், திருமுருகன், நித்யா, சுசித்ரா, சுரேஷ், இக்பால், ரங்கா ஆகியோர் நடிக்கிறார்கள்.
 
பன்னீர்புஷ்பங்கள் சுரேஷ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – பிரபாகர்
இசை – மணிசர்மா
பாடல்கள் – யுகபாரதி, விவேகா
கலை – ராஜீவன்
நடனம் – சுஜாதா, தினா, அஜெய், விஜய்
ஸ்டன்ட் – குன்றத்தூர்பாபு
எடிட்டிங் – ஆண்டனி
தயாரிப்புமேற்பார்வை – ராஜ்குமார்
இணைதயாரிப்பு – எஸ்.மாரியப்பன்
தயாரிப்பு – கே.ஜி.பாண்டியன்
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்பேற்றிருப்பவர்ஆர்.கே.கலைமணி.
இவர் பிரபு, கார்த்திக் நடித்த ‘தைபொறந்தாச்சு’ பிரபுநடித்த ‘சூப்பர்குடும்பம்’ விஜயகாந்த்நடித்த ‘எங்கள்ஆசான்’ போன்றபடங்களை இயக்கியவர்.
‘ஆப்பிள்பெண்ணே’ படத்தைப்பற்றி இயக்குனர் ஆர்.கே.கலைமணியிடம் கேட்டோம்.
 
இன்றைய தலைமுறையினருக்கு அம்மா, அப்பாவைப்பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது.பெற்றோர்களின் பாசம்கூட அவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது. அம்மா, அப்பாவின் அணுகுமுறையை தவறாகப்புரிந்துகொண்டு ஓடிப்போகிற இன்றைய தலைமுறையினரைப் பற்றியபடமே ‘ஆப்பிள்பெண்ணே’.
 
இப்படத்திற்காக ரோஜா நடத்தும் ஓட்டல் ஒன்றைசுமார் 20 லட்சரூபாய் செலவில் குற்றாலத்தில் அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம்.
அம்மா, மகள் பாசத்தை மையப்படுத்தி காதலை இதில் புதுமாதிரியான விதத்தில் சொல்லி இருக்கிறோம். சாலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம், ”என்றார் இயக்குனர் ஆர்.கே. கலைமணி.
 
இந்த படத்தின் கதாநாயகன் வத்சன் நடிகர் இளையதளபதி விஜய்க்கு பழக்கமானவர் என்பதால் தனக்கு படம் ஒப்பந்தமானவுடன் விஜயிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்ற பிறகே நடிக்க சென்றார்.

Comments