22nd of June 2013
சென்னை::காஜல்அகர்வால், ஸ்ருதிஹாசனுக்கும் முந்தைய நடிகைதான். என்றாலும் சினிமாவில் என்ட்ரியாகி குறுகிய காலத்தில் பிரபல நடிகையாகி விட்டார் ஸ்ருதி. அதோடு, படத்துக்குப்படம் படுகவர்ச்சியாக நடித்து பாப்புலராகி விட்டார். அதோடு, முன்னணி நடிகர்களின் படங்கள் என்று குறிவைத்து கைப்பற்றி வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் கப்பார்சிங் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு காஜலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால், அவர் தற்போது பாலிவுட்டிலும் நடிப்பதை காரணம் காட்டி தனது கூலி இரு மடங்காக கேட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த படாதிபதி, கப்பார்சிங் படத்தின் முதல் பாகத்தில் நடித்த ஸ்ருதியை அழைத்து பேசியிருக்கிறார். காஜலை காலி பண்ண நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ருதி, தான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் இருந்து சில லட்சங்களை கம்மி பண்ணி அப்படத்தை கைப்பற்றிக்கொண்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத காஜல்அகர்வால் பலத்த அதிர்ச்சியுடன் ஜில்லாவில் நடிக்க சென்னை விரைந்திருக்கிறார்.
இந்த நேரத்தில், மீண்டும் காஜலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஏழாம் அறிவுக்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை. ஆனால், அடுத்து நடிக்கப்போகிறேன். அதற்காக, நல்ல கதைகளாக கேட்கப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஸ்ருதி தமிழுக்கும் வருகிறார் என்பதால் தெலுங்கைப்போலவே ஏமாந்து விடாமல்

இருக்க, உஷார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் காஜல்.
Comments
Post a Comment