ரயிலில் இருந்து குதித்த மிஷ்கின்!!!

Monday,11th of June 2013
சென்னை::மிஷ்கின் தற்போது ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அந்த படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதும், அதற்காக ஓடும் ரயிலில் இருந்து நிஜமாகவே குதித்ததும்தான் இப்போதைய புதிய செய்தி.
 
இந்த படத்தில் ஸ்ரீ ‘ஆட்டுக்குட்டியின்’ குணம் கொண்டவராகவும், மிஷ்கின் ‘ஓநாய்’ குணம் கொண்டவராகவும் நடிக்கிறார்கள்.
 
இந்த படத்திற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்து நிஜமாகவே சாதனை புரிந்திருக்கிறார் மிஷ்கின். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் முதல் டிரைலரில் அந்த காட்சி இருக்
கிறது.
 
அதைப் பற்றி படத்தின் ஸ்டன்ட் இயக்குனர் பில்லா ஜெகன் கூறுகையில், “ ரயில் வேகம் காரணமாகவும் அதன் தண்டவாளத்தை ஒட்டி நிறைய தூண்களும் கம்பங்களும் இருந்ததால்இக்காட்சியை டூப் வைத்து செய்து விடலாம் என நினைத்தேன்..ஆனால் மிஷ்கினோ ’தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இதை நான் தான் பண்ணுவேன்’ என பிடிவாதமாக கூறிவிட்டார்.அவருக்கு டூப் போடுவதிலும் , சட்டைக்கு பின் கயிறு பயன்படுத்துவதிலும், கிரீன் மேட்டிலோ, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாகவோ இதனை எடுப்பதில் உடன்பாடில்லை. இது மட்டுமில்லாமல் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் ’டேக்’குக்கு போய்விட்டார்.முதல் டேக் திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் ஒரே டேக்குக்கு போய் இந்த காட்சியை வெற்றிகரமாக எடுத்து முடித்தார். இந்த காட்சி மிகச் சிறப்பாக வந்துள்ளது. 
 
இவருடன் பணிபுரிவதை நான் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படம் மிக பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த அளவும் எனக்கு சந்தேகம் இல்லை,” என்றார்.

Comments