24th of June 2013
சென்னை::பொய்’, ‘ராமன் தேடிய சீதை’ படங்களில் நடித்தவர், விமலா ராமன். அவர் கூறியதாவது: தமிழில் நடித்து நீண்ட நாட்களாகி விட்டதே என்கிறார்கள். சிறந்த கதைகள் வராததால் தமிழில் நடிக்கவில்லை. சமீபகாலமாக மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடங்களில் நடித்துவருகிறேன். இந்தி வாய்ப்பும் கிடைத்தது.
மலையாளத்தில் ‘டர்னிங் பாயின்ட்’, இந்தியில் ‘அப்ரா டப்ரி’ படங்களில் இப்போது நடிக்கிறேன். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசைதான். பொருத்தமான கேரக்டர் வந்தால் நடிப்பேன். சிறுவயதில் இருந்தே நடனம் கற்றுள்ளேன். அது தொடர்பான கேரக்டர்கள் வந்தால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன்.
Comments
Post a Comment