கோலிவுட் (ஹன்சிகா) அமுல் பேபியின் பேட்டி!!!

27th of June 2013
சென்னை::கொழுக் மொழுக் உடல் கட்டுடன், “குண்டுகாவாக தோற்றமளித்த ஹன்சிகா, “தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில், எக்கச்சக்கமாக எடையை குறைத்து, “ஸ்லிம்சிகாவாக காட்சி அளிக்கிறார். இந்த கோலிவுட் அமுல் பேபியின் பேட்டி:
 
1 நகைச்சுவை படங்களில், நடிக்க துவங்கி விட்டீர்களே?
 
ஆம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. காமெடி படங்களுக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. டுவிட்டர், பேஸ்புக், இ-மெயில், மீடியா என, பாராட்டுகள் குவிகின்றன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? நகைச்சுவை படங்களில் நடிக்கும்போது, கிளிசரினுக்கு வேலையே இல்லை. இதுவே, பெரிய சந்தோஷமான விஷயம் தானே.
 
2 சித்தார்த்துடனான கெமிஸ்ட்ரி பற்றி?
படத்தில் மட்டும் தான், கெமிஸ்ட்ரி. மற்றபடி வேறு எதுவும் இல்லை. சித்தார்த், நல்ல நண்பர். கடினமான உழைப்பாளி. ஏற்கனவே, நாங்கள் இருவரும், “ஓ மை பிரெண்ட்
என்ற தெலுங்கு படத்தில், இணைந்து நடித்திருக்கிறோம். சக நடிகர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பதில், அவர் கில்லாடி.
 
3 உங்களுக்கு, “சின்ன குஷ்பு என்று, ஒரு பெயர் உள்ளது தெரியுமா?
 
தெரியும். குஷ்பு மேடமே, இதைப் பற்றி என்னிடம் சொல்லிருக்காங்க. ஆனால், நமக்கென தனி அடையாளம் இருந்தால் தான், சினிமாவில் சாதிக்க முடியும் என, எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க. நானும், தனி அடையாளத்துடன் தான், நடிக்க விரும்புகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து, நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது தான், என் ஆசை.
 
4 இத்தனை படங்களில் நடித்தும், தமிழில் சரளமாக பேச வரவில்லையே?
 
தமிழில் பேசுவது, ரொம்ப கஷ்டமா இருக்குங்க. ஆனால், மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியும். திரும்ப பேசும்போது தான், வார்த்தை வர மாட்டேங்குது. ஜாலியாக இருக்கும் நேரங்களில், உதவியாளர்களிடம், தப்புத் தப்பா தமிழில் பேசி, பயிற்சி எடுக்கிறேன். படப் பிடிப்பு நடக்கும்போது,”ஷாட் முடிந்து விட்டதா, வீட்டுக்கு கிளம்பலாமா என்பது போன்ற, சின்ன சின்ன வார்த்தைகளை தமிழில் பேசுகிறேன்.
 
சந்தானத்துடன் நடிப்பது குறித்து?
 
(இந்த கேள்வியை கேட்டதுமே, கெக்கே பிக்கே என சிரிக்கிறார்) படப் பிடிப்புகளின்போது, சந்தானம் எதிரே வந்து நின்றாலே, நான்ஸ்டாப்பா சிரிக்க ஆரம்பித்து விடுவேன். இதைப் பார்த்து, சந்தானம், என்னைக்கு டென்ஷனாகப் போறாரோ தெரியலை. அவர், டயலாக் பேசினாலே, எனக்கு சிரிப்பு வந்து விடும். 

Comments